Monday, June 1, 2026

உறைப்புளி - தமிழ் கட்டுரை தொகுப்பு வாசிப்பு

உறைப்புளி - செல்வேந்திரன் - கட்டுரை தொகுதி மதிப்பீடு

நூல்: உறைப்புளி

ஆசிரியர்: செல்வேந்திரன்

பக்கங்கள்:87

நூலாசிரியரால் தி இந்து தமிழ் திசை நாளிதழில் எழுதப்பட்ட, மற்றும் அவரது மேடைப் பேச்சுகள் ஆகியவற்றில், தேர்ந்தெடுக்கப்பட்ட 10 தலைப்புகள் கொண்ட கட்டுரைகளே இந்நூல்.

அனைத்துக் கட்டுரைகளுமே நேர்த்தியாக, எளிமையான மொழிநடையில் முதல்முறை வாசிப்பவர் கூட புரிந்து கொள்ளும் வகையில் நேரிடையாக பொருள் கொள்ளும் வகையில் எழுதப்பட்டவை மற்றும் ஒரே மூச்சில் படித்து முடித்துவிடக் கூடியவைதான்.

"தார்ச்சாலையில் தனித்து விடப்பட்ட கோழிக்குஞ்சு போல் கார் பதறிக் கொண்டே இருந்தது".....புதிதாகக் கார் ஓட்டும் எந்த ஓட்டுநருடனும் பயணித்த அனைவரும் உணர்ந்திருப்பினும் இந்த உவமை நயம் திரும்பத் திரும்பப் படித்து, நம் வாழ்வில் குறுக்கிட்ட அத்தகைய நிகழ்ச்சிகளை எண்ணிப்பார்த்து, ரசிக்கத் தூண்டியது...நமது பதட்டங்கள் நம் கண்முன்னே திரும்பத் தோன்றின.

மிஷ்கின் அந்த ஓட்டுநரை நடத்திய விதம் மிஷ்கினை நேரிடையாக அறிந்திராத நமக்கு அவர் யார் என்பதை நமக்கு உணர்த்துகிறது.

ஒருவரைப் பற்றி முழுமையாக அறியாமல் அவரைப் பற்றி விமர்சனம் செய்யும் போக்கு அதிகரித்திருக்கும் இக்காலகட்டத்தில், மிஷ்கின் என்ற ஆளுமை பற்றி தெளிவு படுத்த முனைந்து அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்.

"எந்தத் தகுதியும் இல்லாத ஒருவர் எந்த ஆளுமை மீதும் பீயடிக்க முடியும்" என்பதை வாசிக்கும் போது நடைமுறை வாழ்க்கை யதார்த்தம் நம் முகத்தில் அறைகிறது.

சம கால சமூகத்தின் நாற்றம் கூடுவதைக் கண்டும் காணாமல் போகாமல் அதைச் சுட்டித் திருத்திக் கொள்ளச் செய்யும் எழுத்து......

நூலாசிரியர் எப்போதும் வலியுறுத்தும் வாசிப்பு பழக்கம் குறித்த கட்டுரை இதிலும் இடம் பெற்றுள்ளது மொக்கை என்ற தலைப்பில்....

"ஆதார் அட்டையில் ஸ்பெல்லிங் மிஸ்டேக் திருத்த வழியுண்டா என பூங்கா ஜோசியனிடம் விசாரிக்கிறோம்" எனும் போது எந்தவித புரிதலும் இல்லாத அறியாமையில் உழலும் இளைஞர்களைத் தோலுரித்துக் காட்டுகையில் அடிவயிறு கலங்குகிறது எதிர்கால சமுதாயம் குறித்து...

என் வாழ்க்கையிலும் இது சமீபத்தில் நிகழ்ந்தது....எங்கள் வீட்டின் அருகில் உள்ள ஒரு இளைஞன் ரயில் டிக்கெட் பதிவு செய்வதை முறையாக ஏஜென்ட்டாகப் பதிவு செய்யாமல் தனது தனிப்பட்ட கணக்கிலிருந்து முன்பின் தெரியாத நபர்களுக்கு டிக்கெட் பதிவு செய்து கொடுத்துள்ளான்.

இதை அறிந்த ரயில்வே போலீசார் அவனைக் கைது செய்து ஜாமீனில் வெளிவர இயலாத செக்சனில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து சிறையில் அடைத்தது விட்டனர்....ஆறு நாட்கள் சிறையில் இருந்து, அச்சூழ்நிலை காரணமாக, தண்ணீர் கூட அருந்தமுடியாமல் வாடி ஜாமீனில் வெளிவந்து தற்போது தினசரி காவல் அலுவலகம் சென்று கையெழுத்திட்டு வருகிறான்.

முறையாக லைசென்ஸ் வாங்காமல் ஏன் இவ்வாறு செய்தாய் எனக் கேட்டபோது....யாருமே எனக்கு சொல்லல.....எனக்குத் தெரியாது லைசென்ஸ் வாங்கனும்னு என்று கூறினான்.

உறைப்புளி - கட்டுரை தொகுதி விமர்சனம்

எதுவுமே தெரியாமல் ஒரு விஷயத்தை எப்படி இவர்களால் செய்ய முடிகிறது....அப்போதும் தன்மீது தவறு இல்லை இந்த சமூகம் சொல்லித் தரவில்லை என சமூகத்தின் மீது பழியைப் போடும் இந்த மாதிரி இளைஞர்களை வைத்துக் கொண்டு வீட்டில் தான் என்ன செய்யப் போகிறோம்...அல்லது நாட்டில்தான் என்ன செய்யப் போகிறோம்....

இவ்வாறாக 10 கட்டுரைகளும் வெவ்வேறு தளம் சார்ந்தவை....நமது வாழ்வியலோடு பொருத்திப் பார்க்க முடியும் எழுத்து.... நிச்சயம் இளைஞர்களால் வாசிக்கப்படவேண்டியவர் செல்வேந்திரன்.....

No comments:

Post a Comment

இதை படித்துப் பாருங்கள்....

அணுக்கம்

 அறிவு வளர்ந்தா அணுக்கம் போயிடுது நீ பெருசா நான் பெருசான்னு... 04.07.26  9.57am