பாலை நிலப் பயணம் - பயணக் கட்டுரை
நூல்: பாலை நிலப் பயணம்
ஆசிரியர்: செல்வேந்திரன்
பக்கங்கள்:113
பயணநூல்கள் ஏதும் இதுவரை வாசித்ததில்லை.....எனவே ஏதாவது ஒரு பயணநூலை வாசிக்கத் தேடிய போது கிண்டிலில் அகப்பட்ட நூல் இது....ஏற்கெனவே செல்வேந்திரன் அவர்களது நூலை வாசித்திருந்ததன் அடிப்படையிலும்,குறைவான பக்க எண்ணின் அடிப்படையிலும் வாசிக்கத் தரவிறக்கினேன்.
தனியே பயணம் செய்ய வேண்டும் என்ற தீராத ஆசை என்
அடிமனதில்
எப்போதும் உண்டு....இருப்பினும் அதற்கான வாய்ப்புகள் அமையாமலே நாட்களைக் கடத்தி
வருபவள் என்ற வகையில், எப்போது வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் தனியே சென்று
வர இயலும் ஆணினத்தின் மீது என்றுமே தாளாத பொறாமை கொண்டவள் நான்...
ஆண்கள் நினைத்தால் கூட்டமாக ஆண்கள் மட்டுமே செல்லும்
பயணங்கள் வாய்க்கின்றன..
பெண்களுக்கு இந்த மாதிரி வாய்ப்புகள் அமைவது எக்காலத்திலும்,
எந்த வயதிலும்
கடினமே....ஆண்கள் போன்ற ஒரு நட்பு வட்டத்தினை அநேகப் பெண்களால் கட்டமைக்க
முடியாததும் ஒரு பெரிய காரணம்தான்....
பயணநூல்கள் எதையும் வாசித்தறியாத
காரணத்தினால் ஒப்பீட்டளவில் கூறஇயலாத நிலையில்....தனது பயண அனுபவங்களை,அவரும்
பயணநூல்களுக்கு புதிது என்பதால் தான் கண்ட காட்சிகளை அப்படியே நமக்குக் கடத்த
முயற்சித்துள்ளார்....
ஆங்காங்கே மொழிதெரியாத இடங்களில் செய்யும் பயணங்களின்
நடைமுறைச் சிக்கல்கள்,திடீர் தடைக்கற்கள், ஒளிந்திருக்கும் ஆபத்துகள்
ஆகியவற்றைக் கூறிச் செல்கிறார்....
சாம் டூன்ஸ், ராணி கி வாவ் மற்றும் அதே போன்ற மற்றொரு கிணறு,
கோவில்
சிற்பங்களை எல்லாம் விவரிக்கையில் நாம் எப்போதுதான் அதையெல்லாம் நேரில் சென்று
பார்ப்போமோ என்ற ஆவல் எழுவதை மறுக்கமுடியாது...
மொத்தத்தில் படித்து முடித்ததும் ஒரு அனல் மூச்சு
வெளியேறுகிறது..
#why
should boys have all the fun


No comments:
Post a Comment