பூனாட்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை - தமிழ் கதை விமர்சனம்
நூல்: பூனாட்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை
பதிப்பகம்: காலச்சுவடு
பக்கங்கள்: 143
ஆசிரியர்: பெருமாள் முருகன்
Audio book
Storytel app
குரல்:
நண்பரின் பரிந்துரையின் பேரில் one month free
subscription அடிப்படையில் Storytel app பதிவிறக்கம் செய்திருந்தேன்....கோபல்லபுரத்து மக்கள் கதையை
ஏற்கெனவே படித்திருந்ததால் அதிலிருந்து துவங்குவோம் என கேட்கத்
துவங்கினேன்.....இடையிடையே வேலைகள் காரணமாக விட்டுவிட்டுக் கேட்டதில்
தொடர்பில்லாமல் ருசிக்காமல் போனதால், நிறுத்திவிட்டு, மீளவும் கிண்டிலுக்குத்
திரும்பிவிட்டேன்.
நேற்று சகோதரி Jothi Lakshmi(நன்றி மா...) அவர்களின்
பதிவில் audio book பற்றிப் பதிவிட்டிருந்ததைப் பார்த்ததும் மீளவும்
முயற்சிப்போம் என்று தோன்றியது.திரும்பவும் storytel ஐ நிறுவி ஒரு மாதக் கட்டணம்
மட்டும் செலுத்திப் புதுப்பித்தேன்.
அதற்கேற்றார் போல் இன்று 550kms தனியாகக் காரில் பயணிக்க
வேண்டியிருந்த நிலையில் வழக்கமாகப் பாடல்களுடன் பயணிக்கும் நான் இன்று ஒரு
புத்தகத்துடன் பயணம் செய்தால் என்ன என்று தோன்றியது....
சுவாரஸ்யமான கதையாக இருந்தால் கவனம் சிதறாமல் காரினைச்
செலுத்த உதவியாக இருக்குமே என்றெண்ணி இப்புத்தகத்தினைத் தெரிவு செய்து எனது
அலைபேசியில் ஒலிக்கவிட்டேன்...M.S.பூங்குழலி என்பாரது குரலில் கதை ஒலிக்கத் துவங்கியது.கதையை
நாமே படிக்கிறோம் என்ற உணர்விற்கேற்ற ஏற்றத்தாழ்வுடன் உணர்வுபூர்வமாக குரல்
கொடுத்திருக்கிறார்.
பூனாட்சி, எழுத்தாளர் திரு.பெருமாள் முருகன் அவர்கள் தமக்கு நடந்த
பிரச்சினைக்குப் பின்னர் எழுதிய முதல் கதை....அவரது முன்னுரையைப் படிக்கும் போது
அவர் பட்ட வேதனையை உணர முடிகிறது.எழுத்தாளனை மதிக்காத,அவமானப்படுத்தி எழுத
விடாமல் தடுக்கும் சமூகம் தழைப்பதற்கான வாய்ப்பே இல்லை...
பூனாட்சி ஒரு வெள்ளாட்டின் கதை என்றே
ஆரம்பிக்கிறார்.....ஆனால் கதையைக் கேட்கக் கேட்க எனக்கு உயிருள்ள ஒரு பெண் படும்
பாடாகவே படுகிறது. அதிசயமாக ஏழு குட்டியிடும் வம்சத்தின் பலவீனமான பூங்குட்டியினை
காசுக்கு விற்க மனமின்றி, நல்ல மனசுள்ளவனிடம் கொடுத்தால் மட்டுமே பிழைக்கும் என்ற
எண்ணத்தில் ஒரு கிழவனின் கையில் காசு கூட வாங்காமல் கொடுத்துவிட்டுப் போய்விடுகிறான் ஒரு ஊர், பெயர் தெரியாத ஆள்...
அக்கிழவன் அதை தன் வீட்டுக்கு எடுத்து வந்து தன் மனைவியிடம்
கொடுத்து வளர்க்கச் சொல்கிறான்.
அந்த ஆட்டின் மூலம் அவர்கள் பெறும் வாழ்வே கதை...நடுநடுவே
அரசாங்கம் எனும் அமைப்பு எவ்வாறு செயலாற்றுகிறது என்பதையும் எடுத்துரைக்கிறார்.
பூனாட்சியின் பார்வையில் கதை பின்னால் சொல்லப்படுகிறது.
தனக்குப் பிடித்தவனுடன் சேர முடியாமல் பிடிக்காதவனுடன் சேர்ந்தாலும் ஏழு குட்டி
ஈனும் அதிசய ஆடாவதும், ஒரு நேரத்தில் பிடித்தவனுடன் இணைந்து மறுநாளே அவனை சாகக்
கொடுத்து அவன் குட்டிகளையும் சுமந்து பெற்று, அக்குட்டிகளையும் தன்னை
வளர்ப்பவர்களுக்கு பஞ்சகாலத்தில் இரையாக்குவதும், மீளவும் கருத்தரித்து
பஞ்சகாலத்தில் வாழ முடியாமல் கல்லாகிச் சாவதுமான மனதை உருக்கும் கதை....
பூனாட்சி என்ற வெள்ளாட்டுடனே வாழ்ந்து அதன் தவிப்புகளை
உடனிருந்து, தடுக்கவியலாமல் பார்த்து(கேட்டு), நொந்து 550 கிமீட்டர்களைக்
கடந்து வந்து சேர்ந்தேன்....


No comments:
Post a Comment