எனது தந்தை ஒரு மிகச் சிறந்த ஆசிரியர். ஆசிரியர் பணியே அறப்பணி என்பதற்கேற்ப ஒவ்வொரு நாளும் அர்ப்பணிப்போடு வாழ்ந்தார். அவரது கண்டிப்பு, தோரணை, அன்புக்காக, அந்த வட்டாரத்திலேயே புகழ் பெற்றவர்.
அப்படிப்பட்டவருக்கு மகளாக பிறந்தது மட்டுமே எனது வாழ்நாள் சாதனை. அவரது புகழை மீறி என்னால் இன்று வரை எதுவும் செய்ய முடியவில்லை என்பதை இன்றும் அவ்வட்டாரத்தில் கண்கூடாக காணலாம்.
சிறு வயதில் இருந்தே செய்தித்தாள்கள், அம்புலிமாமா, கோகுலம், குமுதம், அனந்த விகடன், போன்றவை படிக்கும் பழக்கம் இருந்தது. கடையில் இருந்து பொட்டுக்கடலை மடித்து கொடுக்கும் காகிதத்தை கூட படிக்கும் தீவிர வாசகி நான்.
செய்தித்தாளை தூக்கி பிடிக்கும் அளவுக்கு கூட திராணி இல்லாததால், அதை கீழே விரித்து அதன் மேல் கவிழ்ந்து கொண்டு படித்து, பள்ளிக்கு கிளம்ப தாமதம் ஆனது. அதன் காரணமாகவே செய்தித்தாளை தடை செய்து விட்டார் என் அம்மா.
வளர்ந்தபின் ஆண்டுக்கு நான்கு புத்தகங்கள் கூட வாசிக்காமல், காலம் கடத்தி வந்த வருடங்கள் ஏராளம். குடும்பம், குழந்தை, வேலை என்று நானே காரணம் கற்பித்துக் கொண்டேன்.
நெடுங்காலம் கழித்து 2020 ஆம் ஆண்டு, முகநூலில் "வாசிப்பை நேசிப்போம்" குழுமத்தை கண்டடைந்தேன். ஆண்டுக்கு இத்தனை புத்தகங்கள் வாசிக்க வேண்டும், என்று இலக்கு நிர்ணயித்து படிக்க ஆரம்பித்தோம். மீண்டும், படிக்கும் ஆர்வம் வந்தது.
2021இல் இருபத்தி இந்து புத்தகங்கள் வாசித்தேன். என் அருமை தந்தையின் மறைவில் இருந்து என்னை மீட்டதும் புத்தகங்களே. இப்பொழுது வண்ணப்பறவை என்கிற இந்த வலைப்பூ மூலம் என் எண்ணங்களை பகிர்ந்து கொள்ள வருகிறேன்.
புத்தக வடிவில் போர்க்கலை நுணுக்கங்கள் - வாழ்கை பாடங்கள்
நான் படித்த பயணக்குறிப்பு




No comments:
Post a Comment